சுஜாதா

“உலகின் கடைசி மனிதன்
அறையினுள் இருக்க,
கதவு தட்டப்பட்டது”
இது நான் என் பள்ளிக்காலத்தில் படித்த முதல் வரி மேலோட்டமாகப்பார்த்தால் ஒரு 6 வார்த்தைகள் தான் ஆனால் இந்த 6 வார்த்தைகளை வைத்து இதனை ஒரு Sci-Fi கதையாக்கலாம், திகில் கதையாக்கலாம் இதுதான் சுஜாதா. சென்ற வாரம் ரொம்ப நாட்களுக்கு பிறகு வலைதளங்கள் முழுதும் ஒரு சுஜாதா அலை காரணம் அவர் பிறந்த நாள்.
நான் என்னளவில் புத்தகம் வாசிப்பதற்க்கும் எழுதுவதற்க்கும் மிக முக்கிய வினையூக்கியாக இருந்தவர் தலைவர் வாத்தியார் தான்.என் கேம்பியன் பள்ளி நாட்களில் ஒரு நாள் இரவு நண்பன் வள்ளி வந்து மாப்பி சுஜாதா இறந்துட்டார் டா என்று சொன்ன போது ஒரு நிமிடம் எங்கள் இருவருக்கும் எப்படி ஏற்று கொள்வதேன்று தெரியவில்லை பல நாட்கள் நாங்கள் இருவரும் பேசும் ஒரு சில நல்ல உரையாடலை நீள உரையாடலாக்கும் வல்லமை அவரை சுற்றி இருந்தே காரணம் அது அவரின் ரங்குஸ்கீயாகட்டும் ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்த ஆகட்டும் பல நாள் எங்கள் Discussion Study சுஜாதாவை வைத்தோ அல்லது அவரின் கதைகள் அல்லது அவர் திரைப்படத்தில் வரும் வசனங்களை பற்றியோ சுழலும். சுஜாதா மறைவுக்கு அடுத்த நாள் செய்திதாள் படிக்கும் பொது என் நண்பர்கள் பலர் கேட்டவை டெய் சுஜாதா னா நாங்க Lady னு நினைத்தோம், அவருக்கு இவ்ளோ வயசா டா அந்த இடத்தில் சுஜாதா ஒரு எழுத்தாளனாக வென்றுவிட்டார் ஆம் அவர் இறக்கின்றவரையிலும் அவர் வயதானவன் என்ற எண்ணம்கூட வராத அளவுக்கு, அவர் எழுத்து எங்களை வளர்த்தது ...! இதுதான் அவர் எழுத்திற்கு கிடைத்த மிகப் பெரிய விருதாக நான் நினைக்கிறேன்.

இத்தருணத்தில் சுஜாதா அவர்களின் நினைவுகளை அசைபோட விரும்புகிறேன், முதலிச் சுஜாதாவை படிக்க ஆரம்பித்து என்னவோ ராஜேஷ்குமார் வழியாகத்தான் என் முதல் ஆதர்ச நாயகர்கள் என்னவோ விவேக் விஷ்ணு தான் ஆனாலும் கணேஷ் வசந்த் மதுமிதா வின் Character Sketch மிக அழகாக புனையப்பட்டிருக்கும்.

"உங்க பேரு?"
"கயல்"
“மொத்தப் பேரே அவ்வளவு தானா?
இல்லை கண்ணுக்கு மட்டுமா?"

இது போன்ற வரிகள் சுஜாதாவால் மட்டுமே முடியும். அதே பொல் நண்பன் சாய் நாத் உடன் Special Class ஐ கட்டடித்துவிட்டு தமுக்கம் புத்தக கண்காட்சிக்கு சென்று ஏன்? ஏதற்கு? எப்படி? வாங்கியது. அப்புத்தகம் அக்காலத்தில் என் நண்பர்கள் சிலர் வைத்திருந்த Brittanica Encyclopedia விற்கு இணையானது என்பேன்.
சுஜாதா அவரின் கல்லூரி தோழரான நம் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவரின் அக்னி சிறகுகள் புத்தகத்தில் ஒரு வரி வரும் உனக்கு கற்று கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் இல்லை நீ யாரிடம் கற்றுக்கொள்கிறாயோ அவர் தாம் உண்மையான ஆசிரியர்கள் நாம் பள்ளி, கல்லூரி கால ஆசிரியர்களுடன் அனைவருக்கும் சில காலம் மட்டுமே பழக்கம் இருக்கும். ஆனால் சுஜாதா என் பார்வையில் நீண்ட நெடுங்காலத்திற்கு பல தலைமுறையினருக்கு ஆசிரியராய் விளங்கியிருக்கிறர். புரியும் படி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரை மதித்து நட்புறவு கொண்டாடுவது தான் ஒரு மாணவனின் பண்பு அவ்வகையில் சுஜாதா சொல்லித்தந்தது விஷயங்கள் எண்ணிலடங்கா .பள்ளி, கல்லூரியில் மக்குத்தனமா இருந்திருந்த எங்களையெல்லாம் உசுப்பி உருப்பட உருவகப்பட வைத்த உன்னதர் சுஜாதா! 
என் தாத்தா, பெரியப்பான்னு எனக்கு ரொம்ப நெருங்கிமான உறவினர் மறைந்த போது ஏற்பட்ட துக்க உணர்வு அவர்கள் காட்டிய அன்பின் மற்றும் பாசத்தை தாண்டி ஒர் புரிதலின் காரணமாக இருந்தது.



சுஜாதாவின் மறைவுச்செய்தி கேட்டபோது மனது ஒரு நெருங்கிய உறவை இழந்த உணர்வு இருந்தது. சுஜாதா நினைவுகளுடன் தனியாக வண்டி ஓட்டும்போது ரோடு பல விதமான உணர்வு கலவையாக இருக்கும் சில சமயம் மகிழ்ச்சி சில சமயம் கண்ணில் நீர் என்று.

தமிழ் என்பது ஒரு உணவகம் என்றால் சுஜாதா அதில் விதம் விதமாக சைவ அசைவ பதார்த்தங்கள் செய்யும் மாஸ்டரை போல வருபவனை திருப்திபடுத்தி திக்குமுக்காட செய்வதில் வல்லவர்.

என் ஐம்புலன்களின் அவதானிப்பை அதிகரிக்கச் செய்ததில் மற்றும் சில விஷயங்களை ஒரு ஆதி அந்தத்துடன் அணுக வைத்ததில், அவர் எழுத்தில் சொல்ல வேண்டும் என்றால் Gene - Genetics தாண்டி சுஜாதாவின் எழுத்தின் பங்களிப்பு அதிகம்!

சுஜாதா என் பள்ளி நாட்களில் எவ்வளவு விஷய்ங்களை தந்து உதவியிருக்கிறார் தனித்து இவ்வளவுக்கு இழப்பாக இன்றும் உணர்வதற்கு! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்னளவில் ஒரு மெய்நிகர் பேராசிரியர்!


நிறைய படிக்காதவர்கள்கூட தமிழின் அருமை, பெருமைகளைத் தெரிந்து கொள்ள வைத்தவர் சுஜாதாதான். தமிழ் இலக்கணம் என்ற சூட்சுமத்தை அவருடைய ஒவ்வொரு கதையிலும் நுணுக்கமாகச் சொல்லிக் கொண்டே வந்தார். அதுதான் கடைசியில் நச்சென்று ஒரு வரியில் முடிப்பாரேஅதேபோல்.
"பிரிவோம் சந்திப்போம்" நாவலின் கடைசி பத்தி (ஆனந்த தாண்டவம்) திரைப்படம் நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்! அதை படித்த போது எனக்கு பெரிய சிலிர்ப்பு ஏற்படவில்லை இரு வருடம் முன்பு என் நண்பன் பல்லாவரம் அருகில் வண்டியில் கீழே விழுந்து நான் அன்றிறவு Betadiene போட்டு கொண்டிருந்த போது அவன் சொன்னது “கீழ விழுந்துட்டேன் எந்திருச்சுட்டேன் டா எல்லாம் ஒழுங்கா இருந்துச்சு But பக்கத்துல அவ இல்ல” நான் படித்த போது இல்லாத தாக்கம் அவன் சொன்ன போது அதே தாக்கம் உண்டானது!!!!
இன்று என் நண்பர்கள் பலர் புத்தக வாசிப்பிலும், படிப்பிலும் அக்கறை காட்டுவதற்கு ஊன்று கோலாகவும், மறைமுகத் தூண்டுகோலாகவும் இருந்தவர் சுஜாதாதான்.
அடுத்து அவர் கற்றதும் பெற்றதும் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டும் நான் பின்னாளில் விகடன் வாசிக்க விகடன் பிரசுரம் வெளியிட்ட பல சுஜாதா புத்தகம் ஒரு காரணம் கீழே வருவது ஒரு வலைதளத்தில் இருந்து சுடப்பட்டது
எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார் எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.

நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!

என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

End of Copy paste 

சுஜாதாவின் சினிமா பங்களிப்பு பற்றி இங்கு சொல்லமல் இருக்க முடியாது. ஆனால் 2.0 வரை சுஜாதா அளவுக்கு தமிழ் சினிவாவில் வசனத்தின் பங்கு ஓரளவுக்கு மீள்ச்சியாக இருக்கும். அந்நியன் படத்தில் வரும் Multiple Personality Disorder சுஜாதாவின் கைவண்ணமில்லை யென்றால் படம் அந்த அளவுக்கு இருந்திருக்குமோ 
ஆய்த எழுத்து படத்தில் வரும் வசனம்
"How about a coffee"
"எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சு!"
"Just a coffee. ஒரு கப்.
புனிதம் கெடாத coffee. whats the problem?"

காதல் doesnt exist.
எல்லாம் hormone சம்மந்தபட்டது ..
androgen, estrogen, testosterone, progesterone,
வெறும் oraganic chemistry. C O H


அதே போல என்னளவில் வந்த கடைசி ரஜினி படம் "சிவாஜி" அதில் 2 3 காட்சியை சுஜாதாவின் நேர்த்தி தெரிந்திருக்கும் MS பாஸ்கர் ரஜினியை சந்திக்கும் போது அனைத்திறகும் தான் One Stop Shop என்பார் அந்த காட்சி அடுத்து VMC ஹனீபா அவர் அலுவலகத்தில் வைத்து வயிற்றை கிழிக்கும் காட்சி அதில் அந்த மருத்துவர் வந்து Halfway between the midline Right Lateral Abdomen என்று சொல்லும் இடம், அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சிவாஜியை பற்றி பேசும் காட்சி அதில் சுமன் கையில் இருக்கும் புத்தகத்தின் வரிகள்
"Madras Messiah"
" மிளிரும் நம்பிக்கை"
"Time for Private Government"


போன்ற வரிகளில் சுஜாதாவின் பங்கு இருந்திருக்கும் என்பது என் அவதானிப்பு.

மேலும் எந்த விமரிசகராலும் தூக்கியெறியமுடியாதது சுஜாதாவின் மொழித் திறன். தமிழை அவ்வளவு எளிதாக கையாண்ட எழுத்தாளர் எவரும் இல்லை என நான் நினைகிறேன். அதில் அதே இலக்கண ஒழுங்கு இருக்கும், சுவாரசியம் குறையாது. சுஜாதா கடைசி வரை தன் மொழியை நடையையும் இளமையாக வைத்திருந்தார். கடைசியாக கல்கியில் வந்த 'உள்ளம் துறந்தவன்' தொடர்கதையில் கூட அவரது கதைமாந்தர்கள் பேசும் மொழி அவ்வளவு இளமையாகவும் இக்காலத்தில் Sync ஆகவும் இருந்தது

சந்தோசமே மையமாக்கி தன்னையும் படிப்போரையும் மகிழ்விக்கும் எழுத்தை மட்டுமே பெரும்பாலும் எழுதினாலும் அவர்கள் சாதிக்காத மனப்புரட்சியையும் அறிவும் அன்பும் இரண்டு கண்கள் என்று ஒரு தலைமுறையை வளர்த்தவர். Life-affirming. Genius is Simplicity. இவர் வெற்றி ஒரு பெரும் உண்மை உணர்த்துகிறது - நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவற்றை மட்டுமே பேசு. உனக்கு பிடிக்காததை கண்டால் நகைச்சுவையாக சொல்லிப்பார்.

பெரும் புகழ் வாய்த்தும் பலர் அதை பணமாக்க முயல்வர். அதைச செய்யாமல் இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே இருந்தார். அதே போல் அவருக்கு தன் பெயரை கொடுத்த சுஜாதா அம்மாவின் தினசரி தியாகங்கள் கண்டிப்பாக நினைத்து பார்க்க வேண்டும்.
ஒருமுறை இவர் தந்தையிடம் கேட்டாராம்நீங்கள் செய்ததுக்கு எப்படி திருப்பி செய்யபோகிறேன்? என்று. அவர் சொன்னாராம் - எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். நான் உனக்கு செய்ததை உன் பிள்ளைகளுக்கு திருப்பி செய் என்று.
இவர் நமக்கு செய்தது போல் நாம் பிறருக்கு என்ன செய்யமுடியும்?
நிறைய படிக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும். கொம்பில் ஏறி உட்காராமல் அடுத்த தலைமுறை இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும். வீடு தேடி வந்தவரை வாங்க என்று மரியாதையுடன் அழைக்கவேண்டும். அறிஞனைப் போல் சிந்தித்து பாமரனைப்போல் பேசவேண்டும். எவரையும் காரணமிருந்தும் திட்டக்கூடாது. காரணமின்றி நம்மை யாரும் தூற்றினாலும் கண்டு கொள்ளாமல் விடவேண்டும். அன்பே இயல்பாய் அறிவே குறியாய் வாழ்ந்தால் இவர் போலத்தான் - மரணமில்லை.

அவர் நரகதில் தான் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Bibliography
Vikatan Articles
Ajayan Bala Blog
Trutamilan Blog
Badri Seshadri Blog
Wikipedia

Comments