என் இசை பயணம் - 7

எனக்கு சினிமா பாடல்கள் கேட்பதில் ஒரு ஆர்வம் ஏற்பட்டதிற்கு ஒரு முக்கிய காரணம் என்னுடைய திருச்சி வாழ்க்கை அதற்கு என் பெரியம்மா என் பெரியப்பா என் அக்கா என் அண்ணன் என்றால் அது மிகையாகத்து  .

                       என் வாழ்வில் ஒன்றுமே  தெரியாமல் இருந்த எனக்கு பலவற்றை அறிமுகம் செய்தது என் பெரியம்மா வீட்டில் தான் இன்று வரை என் மனதில் இருக்கும் பசுமையான நாட்கள் அவை .

                      அப்போது எனக்கு கிடைத்த அனைத்துமே மிக முக்கியமாக தொலைகாட்சி Cable இணைப்புடன் பாடல்களை பெரியப்பா ரிதம்பாஸில் பதிவு செய்து கொண்டு வந்துவிடுவார்கள் .

                நான் படித்த St.James பள்ளி (புனித யாகப்பர்) உள்ள பாடல் கற்று கொள்வதற்காகவே தனி வகுப்பு அதிலும் என்னதான் ஆங்கில பாடல்களை சொல்லி கொடுத்தாலும் நாங்கள் கற்றதேன்னவோ சினிமா பாடல்களைத்தான் . அந்த வகையில் என் சினிமா பாடல் ஆசைக்கு எனக்கு அனைத்துமே உதவியது . இங்கு எனக்கு Paulo Coelho அந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றது .
                                       

"When a person really desires something, all the universe conspires to help that person to realize his dream."

                            அப்போது நான் திருச்சியில் இருந்த பொது மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று ஷங்கர் இயக்கத்தில் வந்த ஜீன்ஸ் படம் தான் அப்போது கிராப்பட்டி சாந்தியில் (இப்போது Appartment ஆகிவிட்டது ) பார்த்த படம் எல்லாரையும் போல எனக்கு மிகவும் பிடித்த பாடல் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் தான் . இன்று வரை ரஹ்மான் பாடல்களில் அடிக்கடி முணுமுணுப்பது அந்த பாடலைத்தான் .

          சில காலம் வீட்டில் இருந்த பழைய கேசட்டில்லாம் அழித்துவிட்டு இந்த நாலு வரிகளைத்தான் பதிந்து வைத்து இருப்பேன் இதற்காக பெரியம்மாவிடம் பல முறை அடி வாங்கி இருக்கிறேன் அந்த அளவிற்கு பிடித்த நாலு வரிகள்

                  "கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
                          உண்டான காதல் அதிசயம்
                  பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
                         படர்கின்ற காதல் அதிசயம்"
ஆனால் இன்றும் அந்த பாடலில் எனக்கு காட்சியமைப்பு என்ற முறையில்



ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே.


                                   இந்த வரிகளை இன்றுவரை மறக்க முடியாது இந்த வரியில் காட்சி அமைப்பில் ஷங்கரின் ஆளுமை அசோக் குமாரின் காட்சியமைப்பு ரஹ்மானின் இசை கோர்ப்பு வைரமுத்தின் வைர வரிகள் அனைத்தும் என்னை என்ன்கோ கொண்டு சென்றது ..

                              அதிலும் இந்த பாடலில் இருந்துதான் நான் வரிகளை கவனிக்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன் அதிலும் சில பாடல்களில் வரும் அறிவியல் வரிகளை
                            


                      "மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
                              மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே"


                          இந்த வரிகளில் கவிப்பேரரசுவின் வரிகள் அத்துடன் ஏ .ஆர் .ரஹ்மான் பாடல்களை தேடி தேடி கேட்க ஆரம்பிதேன் ..


பயணம் தொடரும் ......





Comments